ராம் ரஹீம் தனது இரண்டு சீடர்களை பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக 20 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவித்துவருகிறார்.
தனது இதய நோயைக் குறிப்பிட்டு இவரது தாயாரான நசீப் கவுர்(85), தன் மகனுக்கு 42 நாள்கள் பிணை கோரியிருந்தார்.
கரோனா காலத்தில் சிறிய குற்றங்கள் செய்த குற்றவாளிகள் சிலரை பிணையிலோ, விடுதலையோ செய்ய சிறைத் துறை நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதன் மூலம் ராம் ரஹீமை ஹரியானா அரசு விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக சில சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் ராம் ரஹீமின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
லண்டன் டு கேரளா: வாட்ஸ் அப் குழுவால் வந்த ஐடி ஊழியர்
ராம் ரஹீமுக்கு தீர்ப்பு வந்த பஞ்குலா நீதிமன்றத்தில் வெளியே ஏற்பட்ட கலவரத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.