ஹரியானாவின் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகவும், கடந்த 7ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி தற்போது 90 தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக, காங்கிரஸ், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் என மொத்தமாக 1,168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக மாநில இணைத் தேர்தல் அலுவலர் இந்தர்ஜித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
இதேபோல் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் போட்டியிட 5,543 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 800 பேரின் மனுக்கள் திரும்பப் பெறவும், தள்ளுபடியும் செய்யப்பட்ட நிலையில் தற்போது களத்தில் 3,239 வேட்பாளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.