கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் போதுமான அளவு ரத்தத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சகம், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், வழக்கமாக ரத்த தானம் மேற்கொள்பவர்களின் வீடுகளுக்கு வாகனத்தை அனுப்பி ரத்தத்தை சேகரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரோனாவை கட்டுப்படுத்த Convalescent Plasma Theraphy என்ற சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டுவருகிறது. நோயிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில், நோய் எதிர்ப்புச் சக்தி வளரும். எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் ரத்தம் பாதிக்கப்பட்டோரின் உடலில் செலுத்தப்படுகிறது.
மேலும் இதுகுறித்து பேசிய ஹர்ஷ்வர்தன், "பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்வதற்காக குணமடைந்தவர்களை இந்திய செஞ்சிலுவை சங்கம் தொடர்பு கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவர்களுடன் அமித் ஷா கலந்தாய்வு : போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த மருத்துவர் சங்கம்!