பிரபல இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்நாட்டிலேயே புதிய லைட் யுடிலிட்டி ஹெலிகாப்டர் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரின் திறனை அரசு அலுவலர்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் நிரூபிக்க இமயமலையின் தட்பவெப்பநிலையில் அதிக உயரத்தில் பறக்கும் சோதனை 10 நாள்களாக நடைபெற்றது. இந்தச் சோதனையானது லே பகுதியில் ஐஎஸ்ஏ + 320 சி வரையிலான வெப்பநிலையில் செயல்படுத்தப்பட்டது.
மேலும், சியாச்சின் பனிப்பாறையின் அதிக உயரத்தில் ஹெலிகாப்டரின் பேலோட் திறன் நிரூபிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அமர் சோனத்தின் மிக உயரமான ஹெலிபேட்களிலும் ஹெலிகாப்டரை தரையிறக்கி விமானிகள் சாதித்தனர்.
இதன் மூலம், ஹெலிகாப்டர்களை வடிவமைப்பதிலும் அப்க்ரேட் செய்வதிலும் திறமையான நிறுவனம் என்பதை எச்ஏஎல் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரின் ராணுவப்பதிப்பும் செயல்பாட்டுக்கு அனுமதிக்கும் நிலையில் தயாராக உள்ளது என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிடெட்டின் சிஎம்டி ஆர்.மாதவன் தெரிவித்தார்.
ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கும் இந்த ஆய்வில் பல துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.