கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் ஹெச்2ஓ ஹோலி ஃபெயித், ஆல்ஃபா செரினா என இரண்டு அக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பிட்டிருந்தன.
இந்த இரண்டு கட்டங்களும் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை (Coastal Regulations Zone rules) மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு அதிரடியாக உத்தரவுப் பிறப்பித்தது.
அதன்பேரில், இன்று காலை 11 மணியளில் (5 நிமிட இடைவேளையில்) அந்த இரண்டு குடியிருப்புக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இதற்காக எமல்ஷன் வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : அடையாளம் தெரியாத பெண்ணுக்கு இறுதிச் சடங்கு நடத்திய உ.பி. போலீஸ்