குஜராத் மாநிலம் வதோதராவில் காவலர் சூரஜ் சிங் சவுகான் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கோத்ரி கேனால் சாலையில் தனது ஆண் நண்பருடன் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர்களை மிரட்டி சூரஜ் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பணம் எடுத்து தருவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சூரஜ்ஜுடன் வந்திருந்த ஓட்டுநர் ரஷிக் சவுகானை ஆண் நண்பர் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, சூரஜ் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவலர் சூரஜ், ஓட்டுநர் ரஷிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஐபிசி பிரிவு 376(2)(a) கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞரைக் கல்லால் அடித்துக் கொலை செய்த உறவினர் கைது