இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்பதற்காக, அகமதாபாத்தின் மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' (வணக்கம் ட்ரம்ப்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அம்மாநில ரிசர்வ் படையைச்சேர்ந்த காவல் துறையினர் பல குழுக்களாகப் பிரிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 86 காவல் துறையினர் அடங்கிய ஒரு குழு கோத்ரா நோக்கி, காவல் துறை வேனில் சென்றுள்ளது.
இந்த வாகனம், கோத்ரா அடுத்த 'திம்பா பாட்டியா' என்ற கிராமம் வழியாகச் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அங்குமிங்குமாகச் சென்று, கடைசியில் தலை குப்பிறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 காவல் துறையினர் காயமடைந்தனர். காயமடைந்த காவல் துறையினர் மீட்கப்பட்டு வெல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 'ட்ரம்ப்புக்கு சபர்மதி ஆசிரமம் விசிட் பிடிக்கவில்லை போல' - காந்தியின் கொள்ளுப்பேரன்