குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள கலபாதர் மாவட்ட சிறைச்சாலையில் சிறை கண்காணிப்பாளராக பணிபுரிபவர் எம்.என். ஜடேஜா. அதே சிறையில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வருபவர் எம்.ஜே. சௌகான். இவர்கள் இருவரும் சிறை கைதிகளிடம் ரூ.1.32 லட்சம் கையூட்டு பெற்றுள்ளனர்.
இது குறித்து கைதிகளில் ஒருவரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில், குஜராத் ஊழல் தடுப்பு பிரிவினர் (ஏசிபி) நேற்று இரவு சிறைக்குள் இருவரையும் கைது விசாரணை நடத்தினர்.
அதில் ஜடேஜா, சௌகான் ஆகியோர் கைதிகளை நீதிமன்ற காவலில் துன்புறுத்தாதற்காக ரூ.1.32 லட்சம் கையூட்டு பெற்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: உடற்கூராய்வுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊழியர்: வைரல் வீடியோ!