டெல்லியில் இன்று 35ஆவது சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், ஜிஎஸ்டி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஜிஎஸ்டி முறையை எளிதாக்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, சரக்கு-சேவை வரி விண்ணப்பத்திற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் கீழ்:
- சரக்கு-சேவை வரி விண்ணப்பத்திற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம்.
- பொருளாதார குற்றத் தடுப்பு அமைப்பின் (Anti-Profiteering Authority) சேவை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- சரக்கு-சேவை வரி நிலுவை விண்ணப்ப தாக்கல் தேதி மேலும் இரண்டு மாதங்கள் (ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
- புதிய சரக்கு-சேவை வரி நிலுவைத் தாக்கல் முறை 2020 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
- மின் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டிலிருந்து, ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுக்குக் குறைந்தது 40 லட்சத்து ஈட்டும் நிறுவனங்கள் மட்டும் சரக்கு-சேவை வரி வரம்புக்குள் சேர்க்கப்படுகிறது.
- 5 கோடிக்கும் அதிகமாக வரவு ஈட்டும் நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஜிஎஸ்டி நிலுவை விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும். ஐந்து கோடிக்கும் அதிகமாக வரவு ஈட்டும் நிறுவனங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிலுவை விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும்.