முதியவர் ஒருவர் ஷிருரு சாலையிலிருந்து தண்டவாளத்தைக் கடந்து செல்ல முற்பட்டார். அப்போது எதிர்பாரா விதமாக ரயில் வந்துவிட்டது. அதைக் கவனித்த முதியவர் உடனே தண்டவாளங்களுக்கு நடுவே படுத்து சாமர்த்தியமாகக் காயங்கள் எதுவுமின்றி தப்பித்தார்.
இதனையறிந்த ரயில் அலுவலர்கள் ரயிலைப் பாதியிலே நிறுத்தினர். இந்த சம்பவத்தை ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். தற்போது அந்த வீடியோ வைராலாகி வருகிறது.