ETV Bharat / bharat

பொது சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

author img

By

Published : May 17, 2020, 2:46 PM IST

டெல்லி: எதிர்காலத்தில் நோய்த் தொற்றை திறம்பட எதிர்கொள்ளும் விதமாக நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Health
Health

மத்திய அரசு அறிவித்துள்ள கரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாளான இன்று இறுதிக்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்றைய அறிவிப்பில் பொது சுகாதாரம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, சுகாதார மேம்பாட்டிற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொற்றுகளை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று நோய் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் எனவும் நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் தனியார் பங்களிப்புடன் இணைந்து நாடு முழுவதும் பொது சுகாதாரக் கட்டமைபை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். சுகாதாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு காப்பீடுத் தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.