ETV Bharat / bharat

மக்களின் உயிர்நாடியை பறிக்கும் செயல் - ராகுல் காந்தி - ராகுல் காந்தி

டெல்லி: ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் ஏழை மக்களின் உயிர்நாடியை அரசு பறிக்கிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Raga
Raga
author img

By

Published : Jul 2, 2020, 5:12 PM IST

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, பயணிகள் ரயிலை இயக்க தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் 35 ஆண்டுகளுக்கு ரயிலை இயக்கலாம்.

109 பாதை வழியாக 151 ரயில்களை இயக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் அரசு பாதிப்பை ஏற்படுத்துகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல் ட்வீட்
ராகுல் ட்வீட்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை மக்களுக்கு ரயில்வே உயிர்நாடி போன்றது. ஆனால், அவர்களிடமிருந்து அரசு அதனை பறிக்கிறது. உங்களால் என்ன முடியுமோ எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நல்ல பாடத்தை மக்கள் புகட்டுவர்" என்றார். இந்திய ரயில்வேக்கு கீழ் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 12 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

இதையும் படிங்க: 200 சிறப்பு விமானங்கள் மூலம் 30, 000 இந்தியர்களை அழைத்துவந்த ஸ்பைஸ் ஜெட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.