கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும்விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்துவிதமான போக்குவரத்துச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அனைத்து குடும்பத்தினருக்கும் ரூபாய் 7,500 நிதியுதவியாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.
இந்தாண்டு, உணவின்றி தவிக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து 265 மில்லியனாக இருக்கும் என ஐநாவின் உலக உணவுத் திட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கின் காரணமாக தினக்கூலிகள் பசி பட்டினியில் தவித்துவருகின்றனர்.
-
#Covid19 लॉकडाउन से रोज़ की रोटी कमाकर जीवन चलाने वाले भुखमरी का शिकार हो रहे हैं। झुँझलाहट और नफ़रत से किसी भी समस्या का समाधान नहीं होता।इस संकट में हमारे बेसहारा भाई बहनों को अन्न और जीविका की सुरक्षा देना सरकार की प्राथमिकता होनी ही चाहिए।https://t.co/CEDg7gkqDy
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Covid19 लॉकडाउन से रोज़ की रोटी कमाकर जीवन चलाने वाले भुखमरी का शिकार हो रहे हैं। झुँझलाहट और नफ़रत से किसी भी समस्या का समाधान नहीं होता।इस संकट में हमारे बेसहारा भाई बहनों को अन्न और जीविका की सुरक्षा देना सरकार की प्राथमिकता होनी ही चाहिए।https://t.co/CEDg7gkqDy
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2020#Covid19 लॉकडाउन से रोज़ की रोटी कमाकर जीवन चलाने वाले भुखमरी का शिकार हो रहे हैं। झुँझलाहट और नफ़रत से किसी भी समस्या का समाधान नहीं होता।इस संकट में हमारे बेसहारा भाई बहनों को अन्न और जीविका की सुरक्षा देना सरकार की प्राथमिकता होनी ही चाहिए।https://t.co/CEDg7gkqDy
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2020
கோபம், வெறுப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டு எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிட முடியாது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா