டெல்லி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் அணுகக்கூடிய சூழலில் இயலாமை ஆய்வுகள் மற்றும் புனர்வாழ்வு விஞ்ஞானத்தை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்தை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இது குறித்து டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வரைவு மசோதா குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான மாற்றுத்திறனாளி ஆய்வுகள் மற்றும் மறுவாழ்வு அறிவியல் மசோதா 2021 என்ற வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
இது, நாடாளுமன்றத்தின் தனிச் சட்டத்தின் மூலம் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் மாவட்டத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் எட்டு துறைகள் இருக்கும். இயலாமை ஆய்வுகள்; மறுவாழ்வு அறிவியல்; ஆடியோலஜி மற்றும் பேச்சு மொழி நோயியல்; சிறப்பு கல்வி; உளவியல்; நர்சிங், ஆர்த்தோடிக்ஸ் மற்றும் புரோஸ்டெடிக்ஸ், உதவி தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 ஆண்டுகள் தவிப்பு: பிரிந்த குடும்பத்தைத் தேடும் மாற்றுத்திறனாளி பெண்!