வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள ரணதம்பூர் தேசிய பூங்கா மற்றும் முகுந்த்ரா ஹில் டைகர் ரிசர்வ் அருகே 'விலங்குகள் நடைபாதை' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சுக்ரம் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "வனவிலங்குகளை பாதுகாக்க விலங்குகள் நடைபாதை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தை பாரத்மாலா திட்டத்தின் கீழ் இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
ஆண்டுதோறும் பல வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில், இத்திட்டம் அமலுக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.