இது குறித்து அவர் கூறுகையில், "லடாக் எல்லையில் இந்திய - சீன படைவீரர்களுக்கிடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. அதனை உடனடியாக மத்திய அரசு களைய வேண்டும்.
மேலும் மத்திய அரசு, அவர்களின் மௌனத்தைக் கலைத்து அப்பகுதியில் இரு நாடுகளுக்கிடையே என்ன நடக்கிறது என்பதை கூறினால் நாட்டில் நிலவும் தேவையற்ற குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும்" என்றார்.
கிழக்கு லடாக் எல்லையில் மே 5ஆம் தேதி இந்திய - சீன வீரர்கள் சுமார் 250 பேர் மோதிக்கொண்டனர். இதையடுத்து, இருநாட்டு ராணுவங்களுக்கிடையே பதற்றம் தொற்றிக் கொண்டது. அதனால், இரு நாடுகளும் தங்கள் படை வீரர்களை எல்லையில் குவித்தனர்.
இதையடுத்து, பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு ஏற்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் விரும்புகின்றனர்.
இதையும் படிங்க: 'ஜி.எஸ்.டியை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை!'