ETV Bharat / bharat

சென்னை துறைமுகம் வழியாக பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

பெங்களூரு ரோஸ் வெங்காயம், கிருஷ்ணபுரம் வெங்காய வகைகளை சென்னை துறைமுகத்தின் வழியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

author img

By

Published : Oct 10, 2020, 3:53 AM IST

Govt lifts onion export ban
பெங்களூர் ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வெங்காய தட்டுப்பாட்டின் காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த மாதம் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய வகைகளை அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் இதுகுறித்து வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்த ட்வீட்டில், " விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களின் வாழ்வை வளப்படுத்தவும் 10ஆயிரம் மெட்ரிக் டன் வீதம் பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வகை வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதியளிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை (அக்.9) வெளியான அறிவிப்பில், அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிவரை வெங்காய ஏற்றுமதியை சென்னை துறைமுகத்தின் வழியாக மட்டுமே செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள், ஆந்திரா, கர்நாடக தோட்டக்கலைத் துறையிடம் வெங்காயத்தின் அளவு குறித்து சான்றிதழ் பெறவேண்டும் என்றும் ஏற்றுமதியை கண்காணிக்கும் வகையில், உள்ளூர் வர்த்தக இயக்குநரகத்தில் ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்திருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட வெங்காய தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 15ஆம் தேதி விதித்த வெங்காய ஏற்றுமதிக்கான தடையை எதிர்த்து, வெங்காயம் அதிகப்படியாக உற்பத்தியாகும் மாகராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், நாஷிக் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு இன்னும் நீக்கவில்லை.

உள்நாட்டுச் சந்தையில் பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காயத்திற்கான தேவை மிகவும் குறைவாக இருப்பதால், அதை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் வர்த்தகத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தன.

இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தியாகும் 60 ஆயிரம் டன் பெங்களூரு ரோஸ் வெங்காயத்தில் 90 விழுக்காடு மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதேபோல், இந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படாத கிருஷ்ணாபுரம் வெங்காயம் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.