ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியானது இந்திய கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக சுயதொழில் பயிற்சிகளை அளித்துவருகிறது.
அதனைத் தொடந்து ஜம்முவில் உள்ள உதம்பூர் சிவ் நகரின் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கணினிப் பயிற்சியும் கணினி முறை கணக்கியல் பயிற்சியும் அளித்துவருகிறது.
இதுகுறித்து அந்த திட்டத்தின் இயக்குனர் பி.ஜே.நரு கூறுகையில், ’ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியானது பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் உணவும் தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான செலவுகளை வங்கியே ஏற்றுக்கொள்ளும்’ என்றார்.