ETV Bharat / bharat

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்ற செயல் - ராகுல் விமர்சனம் - பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்ற செயல்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்ற செயல் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல்
ராகுல்
author img

By

Published : May 6, 2020, 5:13 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அரசின் வருவாய் முற்றிலும் முடங்கியது. இதனிடையே, வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.

அதன்படி பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி 2 ரூபாய், சாலை செஸ் வரி 8 ரூபாய் என மொத்தம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான கலால் வரி 5 ரூபாய் சாலை செஸ் வரி 8 ரூபாய் என மொத்தம் 13 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 32.98ஆகவும் டீசல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 31.83ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • कोरोनावायरस से जारी लड़ाई हमारे करोड़ों भाइयों और बहनों के लिए गंभीर आर्थिक कठिनाई का कारण बन रही है। इस समय, कीमतें कम करने के बजाय, पेट्रोल और डीजल पर 10-13 ₹ प्रति लीटर कर बढ़ाने का सरकार का निर्णय अनुचित है और इसे वापस लिया जाना चाहिए। pic.twitter.com/yMvYHK12V4

    — Rahul Gandhi (@RahulGandhi) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனை நியாயமற்ற செயல் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவுக்கு எதிரான போரில் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். விலை குறைப்புக்கு பதில் அரசு விலையை உயர்த்தியுள்ளது. இது நியாயமற்ற செயல், இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கோவிட்-19 குறித்து சுதந்திரமான ஆய்வு தேவை': ஆஸ்திரேலியத் தூதர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.