ETV Bharat / bharat

வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண முகாம்கள் - மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் நிவாரண முகாம்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Mar 28, 2020, 7:46 PM IST

Shah
Shah

கரோனா வைரஸ் நோயால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு செல்ல முடியாமலும் உணவின்றியும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான உதவிகளை செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, நிவாரண முகாம்களை உடனடியாக அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை செய்கின்றனர். சாலைகளிலேயே தங்கும் இவர்கள், தினக்கூலியை வைத்தே பிழைப்பு நடத்திவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் வேலை இன்றி, ஊதியமின்றி தவித்துவருகின்றனர். இதனால், தங்கள் மாநிலத்துக்கு கால்நடையாகவே செல்ல அவர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களின் அவலநிலை - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.