நாட்டின் முன்னணி பொதுத்துறை விமானபோக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்க அமைச்சரவை முடிவெடுத்தது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 27ஆம் தேதி முதல் விருப்பமுள்ளவர்கள் இந்நிறுவனத்தை ஏலமெடுக்கலாம் என அறிவித்தது. ஏலத்திற்கான காலக்கெடுவாக மார்ச் 17ஆம் தேதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது, ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
அதன் பின்னர் கரோனா பரவல் ஏற்பட்டதால், ஜூன் 30, பின்னர் ஆகஸ்ட் 31 என இருமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்காவது முறையாக காலக்கெடு நவம்பர் 20ஆம் தேதி வரை என்று மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார சூழல் சிக்கலாக உள்ளதால், ஏலம் கேட்க விரும்புபவர்களின் வேண்டுகோளின்படி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களுக்கான காலமிது!