கரோனா தடுப்பூசி பரிசோதனையில் சர்வதேச நாடுகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இதில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்தரா ஸெனேக்கா என்ற தடுப்பூசிப் பரிசோதனை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து இந்த தடுப்பூசியின் இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனை மேற்கொள்ள பூனேவைச் சேர்ந்த சேரம் இன்ஸ்டிடியூட் அஃப் இந்தியா என்ற நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய அரசின் மருத்துக ஒழுங்காற்று ஆனையம் அளித்துள்ள ஒப்புதலின்படி, இந்த நிறுவனம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான தன்னார்வளர்களிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பரிசோதனைக்காக சுமார் 100 கோடி மருந்து டோஸ்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அஸ்தரா ஸெனேக்கா நிறுவனம் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவிலேயே பாரத் பயோடெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி பரிசோதனையில் முக்கியக் கட்டங்களை எட்டியுள்ளன.
இதையும் படிங்க: கருத்து சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது - பிரசாந்த் பூஷன்!