குழந்தை இயேசு பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலும் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு பாடல்களுடன் விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு பாடல்கள் பாடி பங்கேற்றார். அலுவலக ஊழியர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை அவர் கொண்டாடினார்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகை: திருப்பலியில் பங்கேற்ற முதலமைச்சர்!