சிறப்பு பாதுகாப்புக் குழு என்பது நாட்டின் மிக முக்கியமானவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடாகும். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு தொடர்ந்து Z+ பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிரதமர் மோடி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு வழங்கப்பட்டுவருகிறது. உள்துறை அமைச்சகத்துக்கு பல புலனாய்வு அமைப்புகள் வழங்கிய ஆலோசனையின் பேரில் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்ட நாட்டின் உயரிய பாதுகாப்பு ஏற்பாடு திரும்பப்பெறப்பட்டுள்ளது.