ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதையடுத்து, அம்மாநில மக்கள் தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாக தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த நிலை நீடித்தால் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர இயலாது என்று எண்ணிய மத்திய உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படையினரின் உதவியுடன் போராட்டங்களை ஒடுக்கியது.
அதன் நீட்சியாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
![மத்திய அரசு அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6393093_farooq_1303newsroom_1584091174_181.jpg)
இந்நிலையில், சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.