ETV Bharat / bharat

கோவிட்-19 பரவல் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் - ஹர்ஷ் வர்தன்

டெல்லி: கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

GoM meet
GoM meet
author img

By

Published : Apr 17, 2020, 4:19 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வைரஸ் பரவலின் நிலைமை குறித்து விவாதிக்க 12ஆவது முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடைபெற்றது.

இது குறித்து உயர்மட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், "சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவிலிருந்து பரவிய இந்த கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன" என்றார்.

மேலும் மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், சுகாதாரத் துறை செயலர் டாக்டர் பிரீதி சூடான் உள்ளிட்ட பல உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.