குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் தோராஜி பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி சிமான் வெகாரியா சோனி பஜார் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் காரை வழிமறித்த இருவர், அவரிடமிருந்த பணப்பையை பிடுங்க முயற்சித்தனர். அவர் போராடியபோதும், அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியும், முகத்தில் மிளகாய் பொடியைத் தூவியும் பணப் பையை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து அவர், அப்பகுதி போலீசாரிடம், "அடையாளம் தெரியாத இருவர் தன்னிடமிருந்த பணப்பையை கொள்ளையடித்துச் சென்றனர். அதில், ரூ.35 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை