ETV Bharat / bharat

தங்கக் கடத்தல் விவகாரம் : ஸ்வப்னாவின் பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

திருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள ஸ்வப்னா சுரேஷின் பிணை மனுவை கொச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Gold smuggling case: Court dismisses Swapna Suresh's bail plea

author img

By

Published : Aug 21, 2020, 7:07 PM IST

கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் தூதரக அலுவலர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறையினர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் ஆகியோரிடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்த விசாரணையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கருடன், ஸ்வப்னா சுரேஷ் மூன்று முறை ஐக்கிய அரபு அமீரகம் சென்றது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை, வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்ப்பட்டது.

இந்நிலையில் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ், பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று (ஆக. 21) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்வப்னா சுரேஷிற்கு பிணை வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை வாதிட்டது.

அதில், ''தங்கக் கடத்தல் விவகாரத்தில் தனக்கு பங்கிருப்பதாக ஸ்வப்னா ஒப்புக் கொண்டார். இரு நாடுகளிலும் தவறு நடந்துள்ளது கண்டறியப்பட்டு விட்டது. இதனால் ஸ்வப்னா குற்றமற்றவர் என்பதை அவர் தான் நிரூபிக்க வேண்டும்'' எனத் தெரிவித்தது.

இதையடுத்து, ”தங்கக் கடத்தல் தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. இதனால் ஸ்வப்னாவுக்கு பிணை வழங்க முடியாது” எனக் கூறி, ஸ்வப்னாவின் பிணை மனுவை கொச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்திய ஸ்வப்னா சுரேஷ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.