டெல்லி: இன்றைய வர்த்தக நாள் முடிவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 647 உயர்ந்து, 49ஆயிரத்து 908 ரூபாயாக உள்ளது.
இதுவே முன்னதாக நேற்று (ஜூன் 30) 10 கிராமிற்கு 49 ஆயிரத்து 261ஆக வர்த்தக முடிவுற்றிருந்தது. வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,611 உயர்ந்து 51 ஆயிரத்து 870ரூபாயாக இருந்தது. ஜூன் 30ஆம் தேதி வர்த்தகத்தில் 50ஆயிரத்து 259 ரூபாயாக இருந்தது.
உலக பொருள் வணிகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 1,788 டாலராக இருந்தது. அதேபோல ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 18.34 டாலராக இருந்தது.