கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இதனையடுத்து அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கோவாவின் அடுத்த முதலமைச்சராக யார் பதவியேற்பார் என்பது குறித்து பாஜக சார்பில் அதிகார்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அக்கட்சியின் சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் அடுத்த முதலமைச்சராக பொறுபேற்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் அக்கட்சியைச் சேர்ந்த விஷ்வஜித் ரானே மற்றும் கூட்டணிக் கட்சியான கோமன்டக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவலிக்கர் ஆகியோரும் முதலமைச்சர் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று இரவு 11 மணிக்கு கோவா முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் என அம்மாநில தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.