உலக புகழ் பெற்ற கால்பந்து ஜாம்பவனான டியாகோ மரடோனா(60) மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டியாகோ மரடோனா உருவ சிலையை சொந்த செலவில் நிறுவுவேன் என கோவா மாநில அறிவியல், தொழில்நுட்ப துறை அமைச்சர் மிக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கோவா இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக கோவா அரசு அல்ல, நான் டியாகோ மரடோனாவின் முழு உருவ சிலையை வடக்கு மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் நிறுவுவேன்" என தெரிவித்தார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்தும் மரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.