நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. நான்காவது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாட்டின் ஒரு சில பகுதிகள் கரோனாவிலிருந்து மீண்டுவருகின்றன. அந்த பட்டியலில் கோவாவும் இடம்பெற்றிருக்கிறது.
ஊரடங்கால் கோவாவில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு பெரு நஷ்டம் ஏற்படவில்லை என்றும் மேலும் கூடிய விரைவில் உள்ளூரிலிருந்து இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலக்கரி சுரங்கப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டால் 3 ஆயிரத்து 500 கோடி கோவாவிற்கு வருவாய் கிடைத்து மாநில பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக் கூறினார்.