அகோண்டா விரிகுடா அருகே ஜூலை 19ஆம் தேதியன்று சிறுவன் ஒருவன் மீன்பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. கோலாவைச் சேர்ந்த அந்த சிறுவனை மீட்க மீனவர்களும், கடற்படையினரும் தீவிரமாகப் போராடியும் அவனை மீட்க முடியவில்லை. அகோண்டா விரிகுடா பகுதியில் மூழ்கிய சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடற்படை விமான நிலையமான ஐ.என்.எஸ் ஹன்சாவிலிருந்து இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகு ஹெலிகாப்டரின் உதவியுடன் நேற்று (ஜூலை 25) சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
ஐ.என்.எஸ். ஹன்சாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் விவேகமான நடவடிக்கையாக உள்ளூர்வாசிகளுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு கேப் ராமா அருகில் சிறுவனது உடல் மீட்டகப்பட்டதாக அறிய முடிகிறது.
கோவாவின் வாஸ்கோ பகுதியில் இயங்கிவரும் கடற்படை விமான நிலையமான ஐ.என்.எஸ் ஹன்சாவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுவனின் உடல் உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.