சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 596-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 83 ஆயிரத்து 430 பேர் ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவரை 1லட்சத்து 70ஆயிரம் பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்குள்ள 19 மாகாணங்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் கரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
அமெரிக்க அடுத்த படியாக பிரேசிலில் 34 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. 27 லட்சம் பேர் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளின் அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதுள்ளது. இருப்பினும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படி்ங்க: கோவிட்-19 எதிரொலி: மூன்று நாள்களில் தேர்தல் வழிகாட்டு முறைகள் தயாரிக்க உத்தரவு!