சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 18 லட்சத்து 17ஆயிரத்து 650க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 72ஆயிரத்து 751பேர் ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 45 லட்சத்து 53ஆயிரத்து 191பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால், அங்கு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் விக்டோரியா மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனா வைரஸ் காரணமாக 25 பேர் உயிழந்துள்ளனர்.
நியூசிலாந்தில் மீண்டும் கரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ள நிலையில், அங்கு விரைவில் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் நியூசிலாந்தில் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது.
மேலும், அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் இந்தியா!