சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 95 லட்சத்து 46 ஆயிரத்து 748க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 123ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 767 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேபோல், கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள பிரேசிலில் 99 ஆயிரத்து 572 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய்த் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!