உலகம் முழுவதிலும் கரோனா தொற்றால் 1 கோடிய 07 லட்சத்து 93 ஆயிரத்து 359க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 5 லட்சத்து 18 ஆயிரத்து 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தத் தொற்றிலிருந்து இதுவரை 59 லட்சத்து 30 ஆயிரத்து 131க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்றை தொடர்ந்து குவாங்ஜு போன்ற நகரங்களில் பரவிவருவதால், மேலும் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி கரோனா குறித்து தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தேசிய வழக்கு மொத்தம் 12,904ஆக இருந்தது. இதில் 282 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதிய வழக்குகளில் 22 குவாங்ஜூ என்ற தென்மேற்கு நகரத்தில் உள்ளன. அங்கு அலுவலக கட்டடங்கள், பொது நூலகங்கள், நலன்புரி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொற்று பரவியுள்ளது.
இருமல் அல்லது தும்மலிலிருந்து நுண்ணிய துளிகளால் தொற்று பரவுகிறது. கரோனா தொற்று பெரும்பாலான மக்களுக்கு லேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டும் ஏற்படுத்துகிறது.