ETV Bharat / bharat

உலகம் முழுவதும் 90 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு - corona cases in world

ஹைதராபாத்: உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கரை லட்சத்தை தாண்டியது.

Global COVID-19 tracker
Global COVID-19 tracker
author img

By

Published : Jun 22, 2020, 10:23 AM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்றைய (ஜூன் 22) நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்து 51 ஆயிரத்து 398ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 70 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து 41 ஆயிரத்து 925ஆக உள்ளது. அதில் புதிதாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கா நாட்டில் பதிவாகியுள்ளது.

கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா நெருக்கடி: எச்1 பி விசாவை நிறுத்தி வைக்க திட்டமிடும் ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.