ETV Bharat / bharat

கரோனாவுக்கு ஃபேபிஃப்ளூ மருந்துதான் மலிவான சிகிச்சை - க்ளென்மார்க் பதில்!

author img

By

Published : Jul 22, 2020, 9:58 AM IST

டெல்லி: கரோனா வைரஸ் தொற்றுக்கு ஃபேபிஃப்ளூ மருந்துதான் மலிவான பயனுள்ள சிகிச்சை முறையாகும் என க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேபி
பேபி

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தற்போது வரை, அரசு அங்கீகரித்த மருந்துகள் மட்டுமே கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், ஃபேபிஃப்ளூ மருந்தை லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கடந்த ஜூன் மாத இறுதியில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த மருந்து ஏற்கனவே ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மருந்து அதிக விலை விற்பனை செய்யப்படுவதாக நாடாளுமன்ற எம்பி ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஃபேபிஃப்ளூ மருந்தை தயாரித்த க்ளென்மார்க் பார்மா நிறுவனம், "ஃபேபிஃப்ளூ மருந்து தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவில் நாங்கள் தான் முதலாவதாக மலிவான முறையில் கரோனா மருந்தை அறிமுகப்படுத்தினோம். 150 நபர்களின் மீது மருந்தை சோதனை செய்ததில், நல்ல முடிவு கிடைத்ததன் அடிப்படையிலே மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்ற சிகிச்சை போல் இதை பயன்படுத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையில்லை. லேசானது முதல் மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள் தாராளமாக மருந்தை உபயோகிக்கலாம்.

அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட இச்சிகிச்சை தான் மலிமான விலையில் பயனுள்ள சிகிச்சை முறையாகும். ஃபேபிஃப்ளூ மருந்து மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும்‌ குறைந்த விலையில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மாத்திரையின் விலை ரூ. 103 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜூலை 13ஆம் தேதி ஃபேபிஃப்ளூ மாத்திரையின் விலை 75 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. க்ளேக்மார்க் நிறுவனத்தின் சிறப்பாக அணுக முறையினாலும், இந்தியாவில் சொந்த ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் விலை குறைவு சாத்தியமானது. ஃபேபிஃப்ளூ மருந்தை உபயோகித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். கரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் குணமடையவைக்கும் தன்மை கொண்டது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.