காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது போல் காதலுக்கு தூரமும் இல்லை என்பதை ஆந்திராவில் ஒரு காதல் ஜோடி நிரூபித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் காதலர்கள் நேரில் சந்தித்துப் பேசுவதே தற்போது கடினமானதாக மாறிவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் தனது காதலனை கரம்பிடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஒரு பெண் வந்துள்ளது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சுமார் 60 கி.மீ நடை பயணம் செய்து தனது காதலன் சாய் புன்னையாவின் ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர்கள் இருவரும் மிகழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த இருவீட்டாரின் பெற்றோர்கள் தங்களை எதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், உடனடியாக காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அடைக்கலம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, இருவரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து, காவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க:'ப்ளூ நிறமான குழந்தை'... பைக்கிலேயே பச்சிளம் குழந்தையை அழைத்து சென்ற மருத்துவர்!