ETV Bharat / bharat

68 கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை... தகாத வார்த்தைகளால் திட்டிய முதல்வர் - Girl students asked to remove undergarments to prove they weren't on period

குஜராத் : புஜ் பகுதியைச் சேர்ந்த ஷ்ரீ சஹாஜானந்த் மகளிர் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 68 கல்லூரி மாணவிகள் மாதவிடாய் காலத்தில் உள்ளனரா என்பதை சோதிக்க உள்ளாடைகளை நீக்கக் கூறிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஷ்ரீ சஹாஜானந்த் மகளிர் கல்வி நிறுவனம்
ஷ்ரீ சஹாஜானந்த் மகளிர் கல்வி நிறுவனம்
author img

By

Published : Feb 14, 2020, 5:42 PM IST

குஜராத் மாநிலம், புஜ் பகுதியைச் சேர்ந்த ஷ்ரீ சஹாஜானந்த் மகளிர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தைப் பொருட்படுத்தாமல் மத நெறிமுறைகளை மீறியதாக அக்கல்லூரியின் விடுதி பொறுப்பாளர் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

68 கல்லூரி மாணவிகளும் கல்லூரியிலுள்ள கோவிலுக்கு மாதவிடாய் காலத்தில் வந்து செல்வதாகவும், சக மாணவிகளை தொட்டுப் பழகுவதாகவும் விடுதிப் பொறுப்பாளர் புகார் தெரிவித்ததையடுத்து, மாணவிகள் அனைவரும் கல்லூரி குளியலறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனித்தனியே சோதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அக்கல்லூரி மாணவிகளிடம் விசாரித்தபோது, கல்லூரியின் விடுதிப் பொறுப்பாளர் அஞ்சலி பென், முதல்வரை அழைத்து தங்களைப் பற்றி புகார் தெரிவித்ததாகவும், தொடர்ந்து தாங்கள் உடனடியாக வகுப்புகளைவிட்டு வெளியேற்றப்பட்டு எவர் எவர் மாதவிடாய் காலத்தில் உள்ளனர் என தனித்தனியே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தொடர்ந்து கல்லூரி முதல்வர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு நடப்பது முதன்முறையல்ல என்றும், தாங்கள் இதுகுறித்து கல்லூரி அறக்கட்டளையிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளின் பெற்றோரைத் தொடர்புகொண்டு, இது மத நம்பிக்கைக் குறித்த விஷயம் என அவர்களை புகார் தெரிவிப்பதிலிருந்து திசைத் திருப்புவதாகவும் சம்பந்தப்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, ”கல்லூரியில் கோவில் உள்ளதால் சில விதிமுறைகளை மாணவிகள் கட்டாயம் பின்பற்றக்கோரி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகள் இவ்வாறு நடத்தப்பட்டது தவறான செயல். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சீனப் போரால் முடிவுக்கு வந்த ரத்தன் டாடாவின் காதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.