ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது தாயுடன் தையல் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்தச் சிறுமியை அவளது தாயின் கண் முன்னே கடத்திச்சென்றனர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாய், அவரது மகளை காப்பாற்ற முயன்றார். ஆனால், கார் அதற்குள் வேகமாக சென்றுவிட்டது. இந்தச் சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொலியின் அடிப்படையில் சிறுமியை கடத்தியவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறை!