ETV Bharat / bharat

ராம்தேவ் பேச்சுக்கு பாஜக தலைவர் ஆதரவு - பாபா ராம்தேவ்

பாட்னா: மூன்றாவது குழந்தை குறித்த ராம்தேவின் சர்ச்சை பேச்சுக்கு பாஜகவின் மூத்த தலைவர் கிரிராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

giriraj singh
author img

By

Published : May 28, 2019, 6:25 PM IST

மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சைக்குள்ளானது. ஆனால், இந்த பேச்சுக்கு, பேகுசாராய் மக்களவை உறுப்பினரும், பாஜக மூத்தத் தலைவருமான கிரிராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "ராம்தேவ் கருத்தை நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள். இது பற்றி வெளி உலகுக்கு தெரிய வைத்ததற்கு ராம்தேவ்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

மக்கள் தொகை குறைப்பதற்கு பாஜக சட்டம் நிறைவேற்றுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பாஜக தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி இது குறித்து முடிவு எடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு பல தரப்பு கண்டனம் தெரிவித்த நிலையில் கிரிராஜ் கூறிய கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.