காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், அக்கட்சியின் மூத்தத் தலைவரும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் கலந்துகொண்டு மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "காந்தி உயிரோடு இருந்திருந்தால், அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு எதிராக டெல்லியிலிருந்து ஸ்ரீநகர்வரை நடைபயணம் மேற்கொண்டிருப்பார். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கையாண்ட கொள்கைகளான ஜனநாயகம், மனிதநேயம், காஷ்மீரின் மரபு ஆகியவற்றை பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீறியுள்ளனர்" என்றார்.