ETV Bharat / bharat

காந்தி- அம்பேத்கர் நம்பிய நாட்டின் பன்முகத்தன்மை.! - Mahatma Gandhi's 150th Birth Anniversary

மும்பை: அண்ணல் காந்தி அடிகளின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரபல பொருளாதார அறிஞரும், காங்கிரஸ் எம்.பி.யுமான டாக்டர். பாலசந்திர முங்கேகர் ஈடிவி பாரத் இணைய தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி வருமாறு:-

Ambetkar
author img

By

Published : Sep 30, 2019, 2:17 PM IST

அண்ணல் காந்திக்கும், சட்டமேதை அம்பேத்கருக்கும் இடையிலான உறவு

முதலில் இவ்வகையான விவாதங்கள் வரவேற்கத்தக்கவை. காந்திக்கும், அம்பேத்கருக்குமிடையே சமூக அமைப்பு, சமூக முன்னோக்கு விஷயங்கள், பொருளாதாரம் என வேறுபாடுகள் இருந்தது. சமகாலத்தில் இருவருக்குமிடையே வலுவான தொடர்பை ஏற்படுத்துவது அவசியம். நாட்டில் மாபெரும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்னைகள் வந்த போதும், காந்தியும், அம்பேத்கரும் இணைந்தே நின்றனர்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கு வகுப்புவாதம், பிற்போக்கு தேசியவாதம் மாபெரும் சவால்.!

நாட்டில் தற்போது என்ன நடக்கிறது.? வகுப்புவாதம், இந்திய சமூகத்துக்கு மிகப்பொிய அச்சுறுத்தலாக உள்ளது. மத சகிப்புணர்வு, நாட்டிற்கு தற்போது தேவை.
இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக, வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அமைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பிற்போக்கு தேசியவாதம், அடிப்படைவாதம் மற்றும் மத, வகுப்புவாதம் பெரும் சவாலாக விளங்குகிறது.
ஆனால் பாருங்கள், காந்திஜி தூய்மையான இந்துத்துவாவாதியாக திகழ்ந்தார். எனினும் மதச்சாா்பற்ற மாநிலங்களை உருவாக்கினார். முகம்மது அலி ஜின்னாவும் மதச்சாா்பற்றவராகவே திகழ்ந்தார்.
தற்போது அவா் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை உருவாக்கியது குறித்து கேள்விகள் எழுவதை பார்க்க முடிகிறது. அம்பேத்கர், பலதரப்பட்ட கலாச்சாரம் இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என விரும்பினார். பன்முகத்தன்மையே நாட்டின் பலம் என்பதை அவர்கள் உணர்ந்து இருந்தனர்.

சமூக சீர்திருத்தம் குறித்து காந்தி- அம்பேத்கர் அணுகுமுறை.!
இந்திய தேசியத்தில் இருந்து, திசைமாறி நாடு இந்து தேசியவாதம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசியம், பலதரப்பட்ட கலாச்சாரம், மொழி, சமயம் என பன்முகத்தன்மை கொண்டது.
ஆனால் இந்து தேசியவாதத்தில் எந்த பன்முகத்தன்மையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே தலைவர் மற்றும் ஒரே சமயம். அங்கு பேச்சில் கூட பன்முகத்தன்மை இல்லை.
நாட்டின் பன்முகத்தன்மைக்கு முடிவு கட்டப்பட்டு வருகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அம்பேத்கரும், காந்தியும் நாட்டின் அனைத்து தரப்பு கலாச்சாரம், மொழி மற்றும் சமயத்துக்கு மதிப்பு அளித்தனர்.
ஏனெனில் இதனை கட்டுப்படுத்த நினைத்தாலோ, அழிக்க முயற்சித்தாலோ, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுத்து, குரலை ஒடுக்கினாலோ, நாட்டின் பன்முகத்தன்மையும் ஜனநாயகமும் முடிவுக்கு வந்துவிடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்தனர்.

இடஒதுக்கீடு குறித்து காந்தி- அம்பேத்கர் பாா்வை.!

1916-ஆம் ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்கு தனித்தேர்தல் முறை இருந்தது. இதேபோல் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கும் தனித்தேர்தல் நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார்.
இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு தனித்தேர்தல் நடைமுறை இருக்கும் போது, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு ஏன் தனித்தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அவரின் வாதம்.
ஆனால் காந்தி, அனைவரும் இணைந்து, ஒரே தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார். பட்டியலின, பழங்குடியினருக்கும் இடஓதுக்கீடு அளித்து தனித்தொகுதி வழங்கலாம் என்றார்.
அம்பேத்கரின் சிந்தனை பொருத்தமுடையது. நாட்டில் மற்ற இந்துக்களுக்கு கிடைக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகள், தீண்டதகாதவர்களாக கருதப்பட்ட பட்டியலின, பழங்குடியினருக்கும் கிடைக்கவில்லை.
அவர்களும் இந்து சமயத்தின் ஒரு அங்கம் என்றால் அவர்களுக்கும் இந்த உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார்.!

நமது செய்தியாளரின் கேள்விக்கு இவ்வாறு டாக்டர். பாலசந்திர முங்கேகர் பதிலளித்தார். (தொடரும்)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.