இந்திய - சீன ராணுவம் லாடாக் எல்லைப் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த அசாதாரண சூழல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதி எனக் கருதப்படும் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (LAC) பகுதிகளில் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரகாண்டில் உள்ள சமோலி பகுதியில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் பகுதியையொட்டி 345 கி.மீ அளவிற்கான எல்லையை சீனா இந்தியாவுடன் பகிர்ந்துள்ளது. எனவே பரஹோதி, மணா, நிதி, மலாரி ஆகிய எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
2014 தொடங்கி 2018ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் மேற்கண்ட பகுதிகளில் சீன ராணுவம் ஏழு முறை அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!