ETV Bharat / bharat

’இந்தாண்டு டிசம்பரில் நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்’ : பட்ஜெட்டில் அறிவிப்பு - மத்திய பட்ஜெட் உரை

டெல்லி: ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமான ஆளில்லா விண்கலத்தின் சோதனை ஓட்டம் இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் என மத்திய பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

gaganyaan
ககன்யான்
author img

By

Published : Feb 1, 2021, 9:47 PM IST

வரும் 2022-இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் முன்னோடி தான் ககன்யான் திட்டம். இதன் மூலம் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக ஆளில்லாத இரண்டு ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இத்திட்டத்திற்காக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ஆளில்லா விண்கலங்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய பட்ஜெட் உரையின் போது, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ’ககன்யான் திட்டத்திற்காக நான்கு இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய விண்வெளித்துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் (launch vehicle) உருவாக்கப்படவுள்ளது. இது பிரேசில் நாட்டை சேர்ந்த அமேசானியா செயற்கைகோள் உள்பட சில சிறிய இந்திய செயற்கைகோள்களையும் சுமந்து செல்லும்.

ககன்யான் திட்டத்தின்படி, இந்தாண்டு இறுதிக்குள் ஆளில்லா விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும்.

இது மட்டுமின்றி ஆழ்கடல் கணக்கெடுப்பு ஆய்வு பயணம், கடலின் பல்லுயிர் பெருக்கம் ஆகிய திட்டங்களுக்காக ’டீப் ஓஷன் மிஷன்’ எனப்படும் ஆழ்கடல் திட்டத்திற்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்

இதையும் படிங்க:பட்ஜெட் 2021: ரயில்வே துறைக்கு எவ்வுளவு நிதி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.