துவாரகாவில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயர் அலுவலர்கள், கட்டடம் கட்டுவதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது குறித்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் அவர் தாமதத்திற்கு காரணம் குறித்து ஆய்வறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
நேற்று (அக். 26) துவாரகாவில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில் நிதின் கட்கரி கூறியதாவது:
"எந்தவொரு பணியும் சிறப்பாக முடிந்தபின் வாழ்த்துகளைத் தெரிவிப்பது அவசியமானது மற்றும் பாரம்பரியமான ஒன்று. ஆனால், நான் அதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. நான் இதற்காக வெட்கப்படுகிறேன்.
2008ஆம் ஆண்டில் கட்டடம் எவ்வாறு கட்டப்படும் என்று முடிவுசெய்யப்பட்டது. அதன் டெண்டர் 2011ஆம் ஆண்டு முடிவானது. கட்டுமானத்தை கட்ட இரண்டு அரசுகள் ஆகிவிட்டது.
ஆனால், 10-12 ஆண்டுகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அமைப்பின் பல அதிகாரிகள் எந்தவொரு முடிவையும் எடுக்காதவர்களாக உள்ளனர்.
இவ்வாறு அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.