கரோனா பரவல் சூழல் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாளை (ஆக. 18) காலை 6 மணி முதல் புதன் கிழமை (ஆக. 19) காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். மக்கள் நடமாட்டத்தைப் பொறுத்து மாற்றம் செய்யப்படும். ஏஎப்டி மில் விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் தான் மில்லை மூடும் நிலைக்கு வந்தோம். துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பி மில்லை மூடக் கோரியுள்ளார்.
மில்லை மூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் கோரிக்கை. அரசு எந்தத் தொழில் நிறுவனங்களையும் நடத்தக் கூடாது என்று துணை நிலை ஆளுநர், தொடர்ந்து மூடுவிழா நடத்தி வருகிறார். ஏஎப்டி மில் மூடுவதற்கு முழு காரணமே துணை நிலை ஆளுநர் தான். மாநில அரசின் அதிகாரத்தில் துணை நிலை ஆளுநரது தலையீடு உள்ளதாக மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளேன். இது குறித்து நீதிமன்றம் செல்லவும் தயாராகவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு! - திருமாவளவனனுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!