கர்நாடக அரசு இன்று முதல் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வீடுகளில் மர வேலை, மின்சார பழுது, குழாய் பழுது போன்ற அத்தியாவசிய வேலைகளை மேற்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது. எனினும், கண்காணிப்பில் உள்ள பகுதிகள், கரோனா நோய்க் கிருமித் தொற்று பாதித்தப் பகுதிகளில் இந்த அனுமதி செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க் கிருமித் தொற்று இல்லாத இடங்களில் உள்ள துணை பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று கூறியுள்ள அரசு, சமூக இடைவெளி அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச புத்தக நாள்: வாசிப்பின் அவசியமும்... தேவையும்..!
ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர வேலைகளுக்கு மட்டும் இந்நிறுவனங்கள் வெகுசில ஊழியர்களை மட்டும் வைத்து இயக்கலாம். பிற ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்துதான் தங்களின் வேலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.